Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, February 22, 2016

சர்வதேச தரத்தில் ஒருலட்சம் மாணவர்கள் படிக்கும் மாபெரும் பல்கலைக்கழகம் அமைக்க பாபா ராம்தேவ் திட்டம்

பதாஞ்சலி ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனத்தின்
உரிமையாளரும் யோகாசன குருவுமான பாபா ராம்தேவ்,
உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள
பிருந்தாவனில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.
அவ்விழாவில் பேசிய பாபா ராம்தேவ், நாட்டின்
தலைநகரான டெல்லியில் ஒருலட்சம் மாணவர்கள் படித்து
பட்டதாரிகளாகும் வகையில் சர்வதேச தரத்திலான
மாபெரும் பல்கலைக்கழகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக
தெரிவித்தார்.
இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் செயல்பட தொடங்கும்
இந்த பல்கலைக்கழகத்தின் கல்வித்தகுதியைப் பார்த்து,
உலகின் பிரபல பல்கலைக்கழகங்களான கேம்பிரிட்ஜ்,
ஹார்வார்ட் போன்ற பல்கலைக்கழகங்களில் படிக்க
விரும்பும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும்
டெல்லி வர ஆசைப்படும் வகையில் இந்த புதிய
பல்கலைக்கழகம் இருக்கும் என பாபா ராம்தேவ்
குறிப்பிட்டுள்ளார்.