தமிழகம் முழுவதும் இன்று முதல் போராட்டம் மேலும்
தீவிரப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்
சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில
தலைவர் தமிழ்ச்செல்வி சென்னை திருவல்லிக்கேணியில்
நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்
கூறியதாவது:-
இடைக்கால பட்ஜெட் மீது அதிருப்தி
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும்,
காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள்
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு
வருகிறோம். இடைக்கால பட்ஜெட்டில் எங்கள்
கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவிப்பு வெளியாகும்
என்று மிகவும் ஆவலாக எதிர்பார்த்தோம்.
ஆனால் இடைக்கால பட்ஜெட்டில் எங்கள் கோரிக்கைகள்
குறித்த அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாதது
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரி ஆசிரியர்
கூட்டமைப்பும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும்
மேல்நிலைஆசிரியர் சங்கமும் கூட்டமைப்பாக
செயல்படுவது என்று முடிவு எடுத்து இருக்கிறோம்.
கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்"என்றார்.