Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, February 18, 2016

சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கான தனி ஒற்றைச்சாளர இணையதள இணைப்பு அரசாணை வெளியீடு

சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோரின்
விண்ணப்பங்களை பெறுவதற்காக தனி ஒற்றை சாளர
இணையதள இணைப்பை தொடங்குவதற்கான அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.ஜெயலலிதா அறிவிப்பு
இதுகுறித்து சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை
கூடுதல் தலைமை செயலாளர் ஜக்மோகன் சிங் ராஜூ 16–ந்
தேதி பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டு
இருப்பதாவது:–சிறு, குறு, நடுத்தர தொழில்
முனைவோர்களுக்கான தொழில் வழிகளை
எளிதாக்குவதற்காக தனியாக ஒற்றைச்சாளர இணையதள
இணைப்பு தொடங்கப்படும் என்று சட்டசபையில் முதல்–
அமைச்சர் ஜெயலலிதா 25.3.15 அன்று அறிவித்தார்.தனி
பாஸ் வர்டு
இந்த அறிவிப்பை அமல்படுத்துவதற்கான 3 கட்ட பணிகள்
குறித்து அரசுக்கு தொழிற்சாலைகள் கமிஷனர் மற்றும்
தொழில், வர்த்தக இயக்குனர் பரிந்துரைத்துள்ளார். அதில்,
ஒற்றைச்சாளர முறை இணைப்பை பெற தனி இணையதளம்
தொடங்கப்பட்டுள்ளது. இதில் தொழில் முனைவோர்
தங்களுக்கான அடிப்படைத் தகவல்களை பதிவு செய்ய
வேண்டும். இதற்காக தனி ‘‘யூசர் நேம், பாஸ் வர்டு’’
உருவாக்க வேண்டும்.அதன் மூலம், ஒற்றைச்சாளர முறை
இணைப்புக்காக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில்
கூறப்பட்டுள்ள தகவலின் அடிப்படியில், தடையில்லா
சான்று மற்றும் அனுமதி உத்தரவு பெற வேண்டிய துறை
பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.நிராகரிப்பு
காரணம்
பின்னர் அதை பிடிஎப் பைலாக மாற்றி பதிவிறக்கம் செய்து,
தகுந்த ஆவணங்களை இணைத்து, மாவட்ட தொழில்
மையத்தில் கொடுக்க வேண்டும். இதை சரிபார்த்து
சம்பந்தப்பட்ட துறைக்கு இந்த மையம் அனுப்பி வைக்கும்.
இதை அந்த துறை, விண்ணப்பதாரரின் யூசர் நேம், பாஸ்
வர்டை பயன்படுத்தி, அங்குள்ள விவரங்களை சரிபார்த்து,
விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்று
உத்தரவு பிறப்பிக்கும். நிராகரிப்புக்கான காரணம் அதில்
கூறப்பட்டு இருக்கும்.சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி
கிடைத்துவிட்டால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின்
இறுதி அனுமதிக்காக மாவட்ட தொழில் மையம் அனுப்பி
வைக்கும்.நிதி ஒதுக்கீடு
மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு,
நிலுவையில் உள்ள விண்ணப்பத்துக்கான தீர்வுக்காக
மாதம் ஒரு முறை கூடும். விண்ணப்பத்தின் நிலையை
எந்த நாளிலும் விண்ணப்பதாரர் பார்க்க முடியும், என்று
கூறியுள்ளார்.அவரது பரிந்துரை ஏற்கப்படுகிறது.
இதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான ஆணை தனியாக
பிறப்பிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.