கருத்துப்படையல்
தரத்தையும், தனித்துவத்தையும் இழக்கிறதா அரசு பள்ளிகள்..?
வாணிபம் செய்ய
வந்த ஆங்கிலேயர் அடிமைப்படுத்த கையாண்ட கல்வி முறைதான், அவர்களுக்கெதிராக ஒன்றுபட்டு
போராடவும் வைத்தது. இந்திய சுதந்திரம் அடைந்த பின் அடித்தட்டு மக்களுக்கும் அடிப்படை
கல்வியறிவு தர வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு கல்வித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. அப்படி பிறந்ததுதுதான்
அரசு பள்ளிகள் எனும் அட்சயப்பாத்திரம்! அறிவுப்பசியோடு
வந்தோருக்கு புகலிடமாகவும், வீடு தேடுச் சென்று உதவும் நல்ல நண்பனாகவும் இருந்தது அரசுப்பள்ளிகளே..!
அலுவலக உதவியாளர் தொடங்கி அப்துல்கலாம் வரை அனைவரும் படித்து உயர ஏணியாக இருந்தது அரசுப்பள்ளிகளே..!
அடிப்படைக்கல்விக்காக
அரசு விலையில்லா பொருட்களை வாரி,வாரி வழங்கிவருவது ஒருபுறம், புற்றீசல்கள் போல உருவாகி
வரும் தனியார் பள்ளிகள் நிறைந்த சூழல் ஒரு புறம் என காட்சிகள் நிறைந்த இந்த நாட்களில்
உண்மையில் அரசுப்பள்ளிகள் தரத்தையும்,தனித்துவத்தையும் இழக்கின்றனவா..? என்கிற வினா
எழ நண்பர்களிடம் Whats Appல் கேட்டோம்.
அவர்கள் தந்த பதில்கள்
இதோ…..
“தனித்துவம் இழந்துவிட்டன.அரசுப்
பள்ளிகள் என்பதில் பாதி உண்மைதான்.
1)அரசுப்பள்ளி
ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அப்பள்ளியிலேயே
படிக்க வைக்க சட்டம் இயற்ற வேண்டும்.மற்றும்
வேலைக்கு சேருவோர் குழந்தைகளிருப்பின் அதனை உறுதிபடுத்தி மதிப்பெண் கூடுதல் அளித்திட
வேண்டும
2)தனியார் பள்ளி
அனுமதி இனி தரக்கூடாது.கட்டமைப்பில்லாத பள்ளிகளை மூட வேண்டும்
3)அரசுப்பள்ளிக்கு
எல்லா வசதிகளும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.உருவாக்கப்பட வேண்டும்
4)பணி இடைப்பயிற்சிகள்,தேவையற்ற
விழாக்கள்,அரசியல் தலையீடுகள்,ரத்து செய்யப்பட வேண்டும்
5)குடிகார ரவுடி
மாணவர் அச்சுறுத்தலும் அரசுப்பள்ளி நலிவுக்கு காரணம்.பள்ளி நீக்கம் போன்ற வற்றை செய்ய
அதிகாரம் வேண்டும்.
6) Blueprint
system ரத்து செய்யப்பட்டு, திறமை மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.தேர்ச்சி விழுக்காட்டுக்கு
பரிசு,சான்றிதழ் வழங்குதல் ரத்து செய்யப்பட வேண்டும்.
7)கல்வித்துறையில்
தலையிடும் அரசியல்வாதியை கடுமையாக தண்டிக்கும்
சட்டம் வேண்டும்.
செய்தால் மீண்டும்
அரசுப்பள்ளிகள் மட்டுமே இயங்கும்.”
-
- கோ.இளங்கோ,
மு.க.ஆ. அ.மே.நி.ப. உப்பிடமங்கலம்,கரூர்
“அரசு பள்ளிகள்
ஆளும் அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளுக்கேற்ப செயல்படுவதால் வேண்டுமென்றே தரத்தை
இழக்கும்படி திட்டமிட்டு ஆட்சி நடத்துகிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம்
பணம் சம்பாதிப்பதற்காக அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் கல்விக்கூடங்களை ஆரம்பித்து
கொள்ளையடித்து வருவதுதான்.
ஆனால் அரசுப்பள்ளிகள்
என்றைக்குமே தனது தனித்துவத்தை இழக்காது. நாம்தான் யார் வந்தாலும் அவர்களையும் வைத்துக்கொண்டு
கற்பித்தல் பணிகளோடு மாணவர்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்களையும் செவ்வனே செய்து, அரசுப்பள்ளியை அடித்துக்கொள்ள ஆளேயில்லை என்று நமது
தனித்துவத்தை நிரூபித்துவருகிறோமே”.
-
- மூ.மகேந்திரன்,
அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, வாங்கல், கரூர்.
“அரசு பள்ளிகள்
தரத்தையும்,தனித்துவத்தையும் இழக்கிறது, அதற்கு காரணம் ஒரு சில ஆசிரியரின் சோம்பேறித்தனமும்,
மாணவர்களின் ஒழுக்க கேடும் தான்.40% ஆசிரியர் தவறும், 60% மாணவர் தவறும் உள்ளது.”
- -
சு.லோகநாதன்,அ.மே.நி.ப.
உடையார் பாளையம், அரியலூர்
“பள்ளியின் தரம் என்பது மாணவா்கள் தங்களது பள்ளிப்பருவத்தை முடித்து பள்ளியை விட்டு வெளிவரும் போது , நல்ல ஆளுமையுடன் சமுதாயத்தில் நல்ல குடிமக்களாக வாழ தேவையான கல்வியை பெற்றிருக்க வேண்டும்.ஆனால் இன்றைய மாணவா்கள் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு கல்லூாிக்கு சென்றவுடன் (நாம் தினமும் செய்தித்தாள்களில் பாா்ப்பது) மாணவன்/ மாணவி தற்கொலை, கத்தியால் குத்து மற்றும் அரசின் உடைமைகளை சேதப்படுத்துதல் போன்ற சயல்களில் ஈடுபடுகின்றனா். அப்படியானால் பள்ளிகளில் கல்வியின் தரம் என்ன என்பதை நீங்களே உணா்வீா்!! ”
- கோ.அருந்ததிவிஜயா,மு.க.ஆ.அமேநிப,கோனூர்,திண்டுக்கல்
- கோ.அருந்ததிவிஜயா,மு.க.ஆ.அமேநிப,கோனூர்,திண்டுக்கல்
“அரசுப்பள்ளிகள்
தரத்தையும்,தனித்துவத்தையும் ஒருபோதும் இழக்காது..”
-.ரமேஷ்ராமன்,ப.ஆ. அ.உ.ப. மஞ்சப்புளிப்பட்டி,கரூர்
www.tnpgtakarurdt.blogspot.in
“அடிப்படை
வசதிகளான கழிப்பறைகள்,வகுப்பறைகள்,கரும்பலகைகள்,இருக்கைகள் கூட இல்லாமல் மரத்தடியில்
இயங்கும் எத்தனையோ அரசு பள்ளிகள் இன்றைக்கும் உள்ளன.ஒரு மாணவனுக்காக மட்டும் இயங்கும்
பள்ளி, மாணவர்களே இல்லாததால் மூடப்பட்டு வரும் பள்ளி,ஓராசிரியர் பள்ளி என அவலநிலையோடு
பள்ளிகள் இருக்கும் நிலையில் தனித்துவம் குறையவில்லை எனச் சொல்லி நம்மை நாமே ஆற்றுப்படுத்துதல்
தகுமோ..! சேற்றுக்காலோடு பாடம் நடத்த வரும் ஆசிரியர்கள் இல்லை. பள்ளிவேலை நேரத்தில்
வட்டி வசூலிக்கப்போகும் ஆசிரியர்கள் இல்லை. முழுக்க முழுக்க தகுதித்தேர்வு / TRB தேர்வு
எழுதி மகுடம் சூடி, வேலையில் சேரும்100% திறமையான ஆசிரியர்கள் இன்றைக்கு உள்ளார்கள்.
எனவே தரத்திற்குப் பஞ்சமிலை.. ஆனால் படிக்க மாணவர்கள் இல்லையே..?
தனியார்
மயத்திற்கு கல்வித்துறையை தாரை வார்க்கும் நடவடிக்கைகள் அரசு பள்ளிகளின் தனித்துவத்தைக்
குழி தோண்டிப் புதைப்பதாகவே உள்ளது.
தனியார்
பள்ளிகளில் இரண்டாண்டுகளும் 12ம் வகுப்பு பாடங்களையே படித்து, தேர்வில் அதிக மதிப்பெண்களை
பெற்று, மாணவன் சேர்வது எங்கே தனியார் கல்லூரிகளிலா? இல்லையே.! அண்ணா பல்கலைக்கழகம்,ஐ.ஐ.டி
–ல் தானே.! 12 ம் வகுப்பு வரை அரசுபள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே அரசின் உயர்கல்வி
நிறுவனங்களில் 90% இடம் என்ற நிலை உருவானால் மட்டுமே அரசு பள்ளிகள் தனித்துவம் பெறும்.
நம்புவோம்.. அரசுப்பள்ளிகள் மெல்ல இனி உயிர்த்தெளும்..!”
-
ப.கார்த்திகேயன்,மு.க.ஆ.அ.மே.நி.ப.ஈசநத்தம்,கரூர்
“அரசுபள்ளிகள்
ஒருபோதும் தனது தரத்தையும், தனித்துவத்தையும் இழக்காது. இன்றைய நாட்களில் புதியதாக
உள்கட்டமைப்பு வசதிகள், புதிய கற்ப்பித்தல் முறைகள் மேம்படுத்தப்பட்டு செவ்வனே நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்றன. இன்னும் மாணவர்,ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் கரங்கள் ஒன்றினைந்து
செயல்பட்டால் அரசுப்ள்ளிகள் ஒருபோதும் தரம்,தனித்துவம் இழக்காது.”
- -
ரம்யா,
இ.நி.அ.அ.ந.ப, பொள்ளாச்சி,கோவை மாவட்டம்
-
“முன்பு இருந்ததைவிட
பணியை நேசித்து செய்யும் தரமான ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள். எப்படி அரசு பள்ளிகள்
தரம் தாழும்?”
-
- ப.சண்முகம்,
பி.எட்.,கல்லூரி மாணவர்,கரூர்
“அரசு பள்ளிகள்
தரம் குறையவில்லை.தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில்
மதிபெண்கள் பெறும் இச்சுழலில் அரசு பள்ளிகள் மங்காத புகழோடு அப்படியேதான் உள்ளன.”
- -
ம.சிவகாமி
லோகநாதன், தனியார் பள்ளி ஆசிரியை, கரூர்
“தனியார் பள்ளிகளின்
மதிப்பெண் பட்டியல்களோடு ஒப்பிடப்பட்டு அரசு பள்ளிகள் தரம் குறைந்ததாக சித்தரிக்கப்படுகிறது.
இது முற்றிலும் தவறு. இரண்டு ஆண்டுகளாக மாணவர்களை அடிமையாக்கி,சொந்த விறுப்பு,வெறுப்பு,விளையாட்டு இவையெல்லாம் ஒதுக்கப்பட்டு தனியார் பள்ளி மாணவர்கள்
பெறும் மதிப்பெண்களை விட, இயல்பான குணத்தோடு இருந்து,கொடுக்கப்பட்ட கால இடைவெளியில்(180
நாட்கள்) அரசு பள்ளி மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே சிறந்தது.எனவே அரசு பள்ளிகளின்
தரமும்,தனிதுவமும் இன்னும் குறையவில்லை.”
-
-மு.கண்ணன்,மு.க.ஆ.
அ.மே.நி.ப. ஈசநத்தம்,கரூர்.
அரசு பள்ளிகளின் தரம் என்றுமே தாழ்ந்த்து இல்லை திட்டமிட்ட கூட்டு. முயற்சியால் அரசுப்பள்ளிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்படுகிறது.முதலாளித்துவத்தை ஊட்டிவளர்க்கும் பத்திரிக்கைகள் , கருப்பு பணத்தை ஆதனியார் பள்ளிகளில் முதலீடு செய்திருக்கும் அரசியல் வாதிகள் ஆகியோரின் சதிதான் அரசுப்பள்ளிகளின் அவல நிலைக்கு காரணம் .தனித்தன்மை என்பது அரசின் கொள்கை முடிவைப்பொறுத்தது
வணிகத்தை பெருக்கவேண்டிய அவசியத்தால் அல்லது லாப வெரியால் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டு கல்விதரத்தை கேள்விக்குறியாக்கியது தனியார் பள்ளிகள்தான் பணத்திற்காக தரம் தாழ்ந்து நிற்பதும் அதுவே
- பாஸ்கர்,முகஆ,குருணிகுளத்துபட்டி, கரூர்
www.tnpgtakarurdt.blogspot.in