பூக்கட்டும் மனமெங்கும்
அன்புப் பொங்கல்
பொங்கட்டும் இல்லத்தில் இன்பப் பொங்கல்!
காக்கட்டும் பண்பாட்டு மரபை மாண்பை
கனியட்டும் தமிழர்தம் ஒருமைப் பாடு!
நீக்கிடுவாய் வேண்டாத செயல்கள் தம்மை
நிலைக்கட்டும் இம்மண்ணில் தமிழின் செம்மை!
போக்கிடுவாய் ஏதிலியர் ஆட்சி தன்னை
பொறுப்புடனே நம்மண்ணை நாமே ஆள்வோம்!
படைப்பு: தண்முகநம்பி , தரகை.