அரசு விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்கள் விடுதிக்கு வரும், 15ம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் ஜூலை, 15ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும், என கலெக்டர் ஜெயந்தி, தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு, எட்டு பள்ளி விடுதிகள், மாணவியர்களுக்கு, ஐந்து பள்ளி விடுதிகள், கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு விதிகள், கல்லூரி மாணவியர்களுக்கு இரண்டு விடுதிகள் என மொத்தம், 17 விடுதிகள் செயல்படுகின்றன.
பள்ளி விடுதிகளில், நான்கு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியரும் சேரத் தகுதியுடையவர்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியரும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
விடுதிகளில், எவ்வித் செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கு உணவு, தங்கும் வசதியும் அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, இரண்டு செட் சீருடைகள், பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிக்காட்டிகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கு, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம், ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம், எட்டு கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி விடுதிகளில் சேர, வரும் 15ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் சேர ஜூலை, 15ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கும் போது ஜாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. தேர்வு செய்யப்பட்டு விடுதியில் சேரும்போது மட்டும் சான்றிதழ்களை அளித்தால் போதும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியாக, ஐந்து இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.