Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, May 04, 2015

மெக்காலே கல்விமுறை- SPECIAL ARTICLE

 இன்றைய மெக்காலே கல்விமுறை மாணவர்களை மனிதனாக மாற்றாமல் மிருகங்களாக
மாற்றிக்கொண்டிருக்கிறது. இந்த கல்வி முறையில்  மாணவர்கள் பாடங்களைப்
புரிந்து படிக்க வேண்டிய அவசியம் இல்லை.பாடங்களை மனப்பாடம் செய்து
படித்தாலே நிறைய மதிப்பெண் பெறக்கூடிய வகையில் நமது மதிப்பீட்டு முறை
உள்ளது .நல்ல ஒழுக்கம் ,பெற்றோரை மதித்தல்,பெரியவர்களுக்கு மரியாதை
கொடுத்தல்,ஆசிரியர்களை கடவுளுக்குச் சமமாக மதித்தல்,மற்றவர்களின்
உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல் ,மனிதனை மனிதனாக மதிக்கக்
கற்றுக்கொள்ளுதல் போன்ற பண்புகளை கற்றுத்தருவதில்லை.

 "இந்தியாவை
அடிமைப்படுத்த லார்டு மெக்காலே இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு
2-2-1835ல்எழுதிய கடிதத்தில் இந்தியர்கள் இங்கு வளமோடும்,
செல்வச்செழிப்போடும், நீதி தவறாதவர்களும் உள்ளனர் . இவர்களை
அடிமைப்படுத்தி மிகப் பழமையான கல்வி முறையைக்கொண்டு வந்தால் இந்தியர்களை
அடிமைப்படுத்தி விடலாம் "என்று எழுதினார் .

 ஆங்கிலேயர்கள் நம்மை
அடிமைப்படுத்த கொண்டு வந்த இந்த கல்வி முறையை நமது ஆட்சியாளர்களும்
தொடர்வதற்குக் காரணம் நம் மக்களை முட்டாளாக வைத்திருப்பதற்குத்
தான்.நாமக்கல்லில் உள்ள கல்வி நிறுவனங்கள் பிராய்லர் கோழிகளை
உருவாக்குவது போல் மாணவர்களை உருவாக்குகின்றனர். அரசுப்பள்ளிகளாவது
மாணவர்களை சிறிதளவாவது சிந்தனை உள்ளவர்களாக உருவாக்குகிறது .ஆனால்
தனியார் பள்ளிகள் மாணவர்களை செம்மறி ஆடுகளாக,பிராய்லர் கோழிகளாக
உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

இன்றைய கல்வி முறை மாணவர்களைச் சிந்திக்க
விடாமல் மனப்பாடம் செய்வதை ஊக்குவிப்பதால் மாணவர்கள் படிப்பினை
வெறுக்கின்றனர்.கல்வி மீது நாட்டத்தை உண்டாக்குகின்ற,அவர்களின் திறமையை
வெளிப்படுத்துகின்ற ,கற்றலை இனிமையாக்குகின்ற கல்விமுறை உருவாக்க
வேண்டும்.இன்றைய கலியுகத்தில் நிலவுகின்ற கொலை ,கொள்ளை, கற்பழிப்பு,ஊழல்,
வறுமை  போன்றவை ஒழிய வேண்டுமென்றால் "கற்றலில் இனிமை "என்ற புதிய
கல்விமுறை உருவாக்க வேண்டும் .

புதிய கல்விமுறையைப் படைப்போம்,
 புதிய இந்தியாவை உருவாக்குவோம் .
                                                                              -ஆசிரியர் திருநாவுக்கரசு ,கரூர் .