Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, May 15, 2015

கற்றலில் இனிமை என்னும் புதிய கல்விமுறை

இன்றைய மெக்காலே கல்விமுறை மாணவர்களிடையே தன்னம்பிக்கை , சுயசிந்தனை,
தர்க்கரீதியான சிந்தனை,நல்லொழுக்கம்,விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை
போன்ற பண்புகளை வளர்ப்பதில்லை .மாறாக வெறுப்பு,கோபம்,மன அழுத்தம்
,எரிச்சல் , வன்முறையைத் தூண்டுதல் ,பழிக்குப்பழி எண்ணம்,ஆசிரியரை
மதிக்காமல் இருத்தல் போன்ற குணங்களையே உருவாக்குகிறது .பள்ளி முடிந்து
வெளியே வரும் மாணவர்களின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசத்தோடு
சந்தோசமாக வீட்டிற்கு வருகின்றனர் .அதுவும் சனி ,ஞாயிறு விடுமுறைக்கு
முதல்நாள் வெள்ளி அன்று பள்ளி முடித்து வெளியே வருகின்ற மாணவர்களைப்
பார்க்கும்பொழுது ஏதோ சிறைச்சாலையில் இருந்து விடுதலை ஆன கைதிகளைப்போல்
துள்ளிக்குதித்து ஓடுகின்றன.இதையெல்லாம் பார்க்கும்பொழுது நமது
கல்விமுறையில்,தேர்வு முறையில் தவறு உள்ளது என்பதை நாம்
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தற்பொழுது +2தேர்வு முடிவு வெளிவந்த சில
நாட்களிலேயே எத்தனை தற்கொலைகள்.இதை எல்லாம் பார்க்கும்பொழுது என்னதான்
கற்றுத்தந்தது நமது கல்விமுறை !மதிப்பெண் மட்டும்தான்
வாழ்க்கையா?

தேர்வில் தோல்வியடைந்தாலோ அல்லது மதிப்பெண் குறைந்தாலோ இந்த
உலகத்தில் வாழத்தகுதிஇல்லாதது போல உயிரை
மாய்த்துக்கொள்கிறார்களே?தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் எல்லாம்
சாதிக்கவில்லையா?இந்த தற்கொலைகளுக்கு காரணம் நமது கல்விமுறையே .அந்த
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை , தைரியத்தை,மனத்துணிவை,மனித
உறுதியை,பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆற்றலை நம் கல்விமுறை
கற்றுத்தரவில்லை என்பதே உண்மை.எனவே இந்த பழைய கல்விமுறையை
ஒழித்துவிட்டு,"கற்றலில் இனிமை "புதிய கல்விமுறையை   உருவாக்க
புறப்படுவோம் வாருங்கள் .எங்களோடு(புதிய கல்விமுறை அமைப்பு) கைகோர்த்து
வாருங்கள் இந்தியாவை மாற்றி அமைப்போம் .....கற்றலில் இனிமை
தொடரும்....

                                                                              -ஆசிரியர். கரூர். திருநாவுக்கரசு