அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் பிப்ரவரி 9, 10-ம் தேதிகளில் விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்துக்குள் (www.dge.tn.gov.in) சென்று “ஹால்டிக்கெட் டவுன்லோடு” என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அதில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர் வுக்கூட அனுமதிச்சீட்டை பதி விறக்கம் செய்துகொள்ளலாம்.
மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, தமிழ் பாடத்தில் கேட்டல், பேசுதல், திறன் தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு நடைபெறும் நாள் விவரங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண் டும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஏற்கெனவே உரிய நேரத்தில் பிளஸ் 2 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து இதுவரையிலும் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளாத தனித்தேர்வர்களும் மேற் குறிப்பிட்ட இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.