Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, December 24, 2016

மின்னணு பரிவர்த்தனைக்கு பரிசுத் திட்டம்: நாளை தொடக்கம்

ரொக்க பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட பரிசுத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக நீதி ஆயோக் எனப்படும் மத்திய கொள்கைக் குழு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களில் 15 ஆயிரம் அதிஷ்டசாலிகளை தினமும் தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை வழங்கும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.