கணினியை நாம் எங்கும் கொண்டு செல்ல முடியாது என்பதால், அதற்கு மாற்றாக வந்தது தான் மடிக்கணினி எனப்படும் லேப்டாப். ஆனால் கணினியை விட விலை அதிகமான இவற்றை வாங்குவதற்கு பதிலாக பலர் தங்களின் ஸ்மார்ட்போன் மூலம் வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால் அதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதனைத் தகர்த்து புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்ட INDIEGOGO என்ற நிறுவனம் தனது UNUIGA-S905 என்ற கருவி ஒன்றினை வெளிவிட்டுள்ளது. இதனை பயன்படுத்த குறைந்த மின்சாரம் போதுமானது. சிறிய அளவிலான இது REMIX OS என்ற தளத்தில் பயன்படுகிறது.
ANDROID ஐ விட விலை குறைந்த இந்த கருவியானது ஒரு சிறிய கணினி போல் செயல்படுகிறது. இவை 1GB RAM மற்றும் 2 GHZ PROCESSOR வேகம் கொண்டது. 16GB STORAGE வசதியுடன் உள்ளது. இதனை பயன்படுத்த நமக்கு திரை மற்றும் கிபோர்ட் மற்றும் மௌஸ் இருந்தால் போதும். இதன் விலை ரூ:2000 மட்டுமே. இதன் மற்றொரு மாடல் 2GB RAM மற்றும் 32GB STORAGE கொண்டது. அதன் விலை ரூ.3000 . இதில் நாம் வை-ஃபை பயன்படுத்த முடியும். பெரும்பாலும் இப்போது வரும் டிவி இல் உள்ள HDMI மூலம் நாம் இதனை கனெக்ட் செய்து பயன்படுத்தலாம்.