Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, April 07, 2016

கால்நடை பல்கலை கழகத்தில் ஜூன் முதல் வாரம் விண்ணப்பம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை
துணைவேந்தர் எஸ்.எஸ்.திலகர் சென்னையில், நேற்று
கூறியதாவது:
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில்,
வெளியிடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கான
தரவரிசை பட்டியலில், தமிழகத்தில், ஒரு தனியார்
பல்கலைக் கழகம் உட்பட, 13 பல்கலைக் கழகங்கள்
மட்டுமே இடம் பெற்றுள்ளன. அவற்றில், அரசு
நிறுவனங்களில் இரண்டாவது இடத்தை, தமிழ்நாடு
கால்நடை பல்கலைக் கழகம் பிடித்து சாதனை
புரிந்துள்ளது.
மத்திய அரசு, முதன்முறையாக வெளியிட்டுள்ள
தரவரிசை பட்டியலில், தேசிய அளவில், 36வது இடத்தை
பிடித்திருப்பது, இப்பல்கலைக் கழகத்தின் தரத்துக்கு
சான்று. இந்தாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம்,
ஜூன் முதல் வாரத்தில் துவங்கி, ஒரு மாத காலம் வரை,
'ஆன்லைனில்' கிடைக்கும்.
இந்தாண்டு முதல், புதுக்கோட்டை மண்டல ஆய்வு
மையத்தில், பாலிடெக்னிக் வகுப்புகள்
துவங்கப்படுகின்றன. கறவை மாடு, ஆடு, பசு, கோழி,
பன்றி, வான் கோழி வளர்ப்பு முறை பற்றிய, ஓராண்டு
டிப்ளமோ படிப்பு, அங்கு பயிற்றுவிக்கப்படும். அதற்கான
மாணவர் சேர்க்கை, ஆகஸ்டில் துவங்கும். இவ்வாறு
அவர் தெரிவித்தார். பல்கலைக் கழக பதிவாளர்
டி.ஜே.ஹரிகிருஷ்ணன், உடன் இருந்தார்.