Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, March 09, 2016

பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது; ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது


ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் என்ற செயற்கைகோள்,
பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட் மூலம் நாளை
(வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு விண்ணில்
ஏவப்படுகிறது. இதற்கான 54½ மணி நேர ‘கவுண்ட்டவுன்’
நேற்று தொடங்கியது.பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார்
ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு
அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 5
செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.இப்போது 1,425
கிலோ எடை கொண்ட 6–வது செயற்கைகோளான
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப்யை பி.எஸ்.எல்.வி. சி–32
ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்
உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுமையத்தில் இருந்து
நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு அனுப்ப
இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.இதற்காக எரிபொருள்கள்
நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. தற்போது
இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் ராக்கெட்டை
ஏவுவதற்கான 54½ மணிநேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று
காலை 9.30 மணிக்கு தொடங்கியது.இதுகுறித்து இஸ்ரோ
விஞ்ஞானிகள் கூறியதாவது:–‘கவுண்ட்டவுன்’ தொடக்கம்
பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட் முதலாவது ஏவுதளத்தில்
இருந்து நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு
விண்ணில் ஏவப்படுகிறது. 320 டன் எடையும், 44.4 மீட்டர்
உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும்
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் செயற்கைகோள்
இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில்
இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும்,
அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை
நிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுட்காலம் 12
ஆண்டுகளாகும்.இதன்மூலம் இயற்கை சீற்றம், இயற்கை
பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை
கண்காணிக்க முடியும். ராக்கெட்டை ஏவுவதற்கான
‘கவுண்ட்டவுன்’ இன்று (நேற்று) காலை 9.30 மணிக்கு
தொடங்கப்பட்டு உள்ளது.  இவ்வாறு விஞ்ஞானிகள்
கூறினார்கள்.