Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, March 17, 2016

வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

புனித வெள்ளியையொட்டி வருகிற 25-ந் தேதி
வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து 26-ந் தேதி மாதத்தின் நான்காவது
சனிக்கிழமையும், 27-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையும்
வருவதால் அடுத்தடுத்து 3 நாட்கள் தமிழகத்தில் வங்கிகள்
செயல்படாது. ‘ஹோலி’ பண்டிகை 24-ந் தேதி
கொண்டாடப்பட உள்ளது.
இதனால் வட இந்தியாவை பொறுத்தமட்டில் 24-ந் தேதி
முதல் 27-ந் தேதி வரையிலான 4 நாட்கள் வங்கிகள்
செயல்படாது. வங்கிகளுக்கு தொடர் விடுமுறை
வருவதால் காசோலை, வரைவோலை பரிமாற்றங்கள், பண
பரிவர்த்தனைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், வங்கி பணிகளை முன்கூட்டியே முடித்து
கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை வங்கி நிர்வாகங்கள்
அறிவுறுத்தி உள்ளன. குறிப்பாக பெரும்பாலான ஏ.டி.எம்.
மையங்களில் பணம் இல்லாமல் போகும் வாய்ப்புகள்
அதிகம் உள்ளது.
இதனால் ஏ.டி.எம். எந்திரங்களில் தட்டுப்பாடு ஏற்படாத
வகையில் போதிய பணத்தை நிரப்ப வங்கிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள்
கேட்டுக்கொண்டுள்ளனர்.