தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று, பிளஸ் 2
பொதுத்தேர்வு துவங்கியது. பாடப் புத்தகத்தின் பின்பக்க
கேள்விகள் மட்டுமின்றி, பாடங்களின் உள் பகுதியில்
இருந்தும் கேள்விகள் இடம் பெற்றன. நேற்று நடந்த,
பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், 100
மதிப்பெண்களுக்கான கேள்விகளில், 10
மதிப்பெண்களுக்கான கேள்விகள், பாடத்தின் உள்ளே
இருந்து இடம் பெற்றன. ஒரு மதிப்பெண் கேள்விகள், ஆறு;
இரண்டு மதிப்பெண் கேள்விகள், இரண்டு என, பாடங்களின்
உள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டன.
'மாணவர்கள், பாடத்தின் பின் பகுதியில் உள்ள வினாக்கள்
மற்றும் வினா வங்கிகளை மட்டும் படிக்க வேண்டாம்;
பொதுத்தேர்வில், பாடத்தின் உள் பகுதியிலிருந்தும்
வினாக்கள் இடம் பெறும்' என, தேர்வுத் துறை ஏற்கனவே
அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்றைய
தேர்வில், புதிய நடைமுறை அமலானது. இதன்மூலம்,
விடைகளை மனப்படாம் செய்து தேர்வெழுதும்
மாணவர்கள், இனி, 'சென்டம்' எனப்படும், நுாற்றுக்கு
நுாறு மதிப்பெண் பெறுவது கடினம்.