Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, January 03, 2016

ராமேஸ்வரத்திற்கு பகல் நேர ரயில் இல்லை ; கலாம் ஆசையை நிராகரித்தது ரயில்வே

ராமேஸ்வரத்திற்கு பலருக்கும் நன்மை தரும் வகையில் பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் ஆசைக்கு வழி இல்லை என தென்னக ரயில்வே மேலாளர் ஷோரி கூறினார் .ராமேஸ்வரத்தில் ஷோரி ரயில்வே பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அவர் நிருபர்களிடம் பேசுகையில் ; தூக்குப்பாலம் பணிகள் விரைவில் முடிவடையும். பாலக்காடு- ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயில் விரைவில் ஓட துவங்கும் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்திற்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் ஏதும் இருக்கிறதா என நிருபர்கள் கேட்டனர். இதற்கு ஷோரி பதில் அளிக்கையில், இது தொடர்பாக எவ்வித பரிசீலனை திட்டமும் ஏதுமில்லை என்றார்.

கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த பாம்பன் நூற்றாண்டு விழாவில் கலாம் பங்கேற்றார். அப்போது அவர் ராமேஸ்வரத்திற்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் விட வேண்டும். இதன் மூலம் மீனவர்கள், வணிகர்கள் சுற்றுலா பயணிகள் பயன்பெறுவர் என கூறினார். இதற்கு விழாவில் பங்கேற்ற அதிகாரிகள் கலாமின் ஆசை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.