நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1952ம்
ஆண்டில் சீன தலைதகர் பெய்ஜிங்கில் வாழ்ந்தார் என்று கூறப்படுவது தவறு என,
லண்டன் இணையதளம் ஒன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது.
1945-ஆம் ஆண்டு, தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்தார் என அவரது மரணம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லண்டனிலிருந்து இயங்கி வரும் போஸ்ஃபைல்ஸ்.இன்போ இணையதளம் நேதாஜி குறித்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது: 1952ம் ஆண்டில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் வாழ்ந்தார் எனக் கூறப்படுவது தவறு. 1952ல் அவர் பெய்ஜிங்கில் இருந்ததாக வெளியிடப்பட்ட மங்கோலிய வர்த்தகர்களும், சீன அதிகாரிகள் சந்திக்கும் போட்டோவில் இருப்பது அவரில்லை. அதில் இருப்பது பிகிங் மருத்துவக்கல்லூரியின் கண்காணிப்பாளராக இருந்த லீ கி ஹுங் என்பவரே. இவ்வாறு அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
மேலும் இத்தகவல்கள் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய அரசுகக்கு அனுப்பிய தந்தியில் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. முன்னதாக 1945ம் ஆண்டு, நேதாஜி ரஷ்யாவுக்குத் தப்பியோடினார் என்ற தகவலும் தவறானது என கடந்த மாதம்(டிச.,7ம் தேதி, 2015) இந்த இணையதளம் ஆவணங்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.