Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, January 03, 2016

இளம் அறிவியல் ஆய்வாளர் விருது டிசம்பர் 4 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருதுக்கு டிசம்பர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:அறிவியல் நகரம், 2014ம் ஆண்டிற்கான “தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது” மற்றும் “தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது” என்ற விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்கள், விதிகள் மற்றும் விவரங்களை அறிவியல் நகர இணைய தளத்தில் www.sciencecitychennai.in வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அறிவியல் ஆய்வாளர்கள் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் டிசம்பர் 4ம் தேதி மாலை 5.45 மணிவரை மட்டுமே அறிவியல் நகரத்தில் பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.