Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, December 05, 2015

மது குடித்ததால் டிஸ்மிஸ்; மாணவியரை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

வகுப்பறையில் மது குடித்துவாந்தி எடுத்துமயங்கி விழுந்ததால்டிஸ்மிஸ் செய்யப்பட்டநான்குமாணவியரைமீண்டும் இன்று பள்ளியில் சேர்க்ககலெக்டர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்கடந்த, 21ம் தேதி நடந்தது. தேர்வு எழுதி கொண்டிருந்த போதுபிளஸ் 1மாணவியர்நான்கு பேர்வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். விசாரணையில்அவர்கள்மது அருந்தியது தெரிய வந்தது. மாணவி ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்காகமாணவியர் மது அருந்தியது தெரிந்தது. மாணவியரிடம்தலைமையாசிரியர் கிருஷ்ணவேணிடிசி எனப்படும்பள்ளியிலிருந்து வெளியே அனுப்புவதற்கான சான்றிதழை கொடுத்துள்ளார்மூன்று மாணவியர் பெற்றுக் கொள்ளவில்லை. பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாணவியரை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் எனபல தரப்பில் இருந்தும் கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில்சம்பந்தப்பட்ட மாணவியருக்குகவுன்சிலிங் எனப்படும் நல்லொழுக்க அறிவுரை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்துஇன்று மீண்டும் அவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். 
இது குறித்து நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது: 
இன்றைய மாணவர்கள் மத்தியில்சினிமாடிவிமொபைல் போன் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்லது எதுகெட்டது எது எனபிரித்து பார்க்கத் தெரியவில்லை. சினிமா வேறுநிஜம் வேறு என்பதை மாணவர்களுக்குஆசிரியர்கள் தான் புரியவைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு அறிவு மட்டுமின்றிநற்பண்புகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும். மாணவ,மாணவியரை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். வகுப்பறையில் விழா கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்.