தமிழகத்தில் கல்வித்துறைக்கு உட்பட்ட மண்டல தேர்வுத்துறை அலுவலகங்களுக்கு பதில், மாவட்டம் வாரியாக தேர்வுத்துறை அலுவலகம் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை நிர்வாக மாற்றத்தையடுத்து, அனைத்து வகை பள்ளிகளும் பள்ளி கல்வி இயக்குனரின் கீழ் கொண்டுவரப்பட்டன. இதையடுத்து தேர்வுத்துறை நிர்வாகத்திலும் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, கடலுார், சேலம், வேலுார் மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர் அந்தஸ்தில் துணை இயக்குனர்கள் கீழ், மண்டல தேர்வுத்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன.பொதுத் தேர்வுகள் நடத்துவது, வினாத்தாள் வழங்குவது, மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட பணிகளை இவ்வலுவலக பணியாளர்கள் மேற்கொள்வர்.
இந்நிலையில், மண்டல அலுவலகங்களுக்கு பதில் மாவட்டம் தோறும் டி.இ.ஓ.,க்கள் தலைமையில், தேர்வுத்துறை அலுவலகம் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.