Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, March 01, 2017

விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ;திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு

'விழுப்புரம் மாவட்டத்தில், திட்டமிட்டபடி நாளை, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் விழாவுக்காக, அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் இயங்காது.

ஆனால், தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு நாளை துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 தேர்வு என்னாகும் என, தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மார்ஸ் கூறுகையில், ''பிளஸ் 2 பொதுத்தேர்வு, திட்டமிட்டபடி நடக்கும். தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள், அதிகாரிகள் விடுப்பு எடுக்கக் கூடாது. மற்ற பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.