பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் அரசு சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்கள் அறிவியல் செய்முறை தேர்வுக்கும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு மார்ச்-2017 இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26-ஆம் தேதி முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரையில் (விடுமுறை நாள்கள் தவிர்த்து) அந்தந்த கல்வி மாவட்ட வாரியாக அமைத்துள்ள அரசுத் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கும் பெயர் பதிவு செய்து கொள்வது அவசியம் ஆகும்.
அரசு தேர்வு சேவை மையம்: இந்தத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கு கல்வி மாவட்ட வாரியாக ஆண், பெண் ஆகியோருக்கு தனித்தனியே சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நேரில் சென்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: இத்தேர்வுக்கு கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவு கட்டணம்-50 சேர்த்து ரூ.175-ஐ பணமாக செலுத்த வேண்டும். பின்னர் தனித்தேர்வர்கள் ஒவ்வொருவருக்கும் விண்ணப்ப எண்ணுடன் ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும். அதேபோல் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய்பேசாதோருக்கு கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், அரசு தேர்வுகள் மண்டல இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.