புதிய மின் இணைப்பிற்கு, இணையதளத்தில்
விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்தாமல்,
அடுத்தவர் மீது, குறைகூறி தப்பித்து வரும்
அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு மின் வாரியம், 'குட்டு'
வைத்துள்ளது.
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெற, தமிழ்நாடு மின்
வாரிய பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
நிர்ணயித்துள்ள காலக்கெடுவிற்குள், புதிய மின்
இணைப்பு வழங்க வேண்டும். ஆனால், உரிய ஆவணங்
களுடன், உரிய கட்டணத்தை செலுத்தினாலும், மின்
இணைப்பை வழங்காமல் ஊழியர்கள், மக்களை
அலைக்கழிக்கின்றனர்; இதற்கு, அதிகாரிகளும்
உடந்தை.இதையடுத்து, புதிய
மின் இணைப்பிற்கு இணையதளம் மூலம்
விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த, 2012ல், மின்
வாரியம் முடிவு செய்தது.
இதன் மூலம், விண்ணப்பிக்கும்தேதி, வரிசை எண்
போன்ற விவரங்கள், கம்ப்யூட்டரில் பதிவு ஆகும்.
எனவே, தேவை இல்லாமல், மக்களை அலைக்கழிக்க
முடியாது.தற்போது, அந்த திட்டத்திற்கான அனைத்து
பணிகளும் முடிந்த நிலையில், அதை செயல்படுத்த, மின்
வாரியம் தயங்கி வருகிறது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது:இணையதளத்தில், புதிய மின்
இணைப்பிற்கு விண்ணப்பிக்கும் திட்டத்திற்கான
அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. அதில்
இடம் பெற வேண்டிய கட்டண விவரங்களை, நிதி பிரிவு
அதிகாரிகள்தான் தொகுப்பாக தயாரித்து வழங்க
வேண்டும். ஆனால், அவர்கள் அலட்சியமாக உள்ளனர்.
இதையடுத்து, வாரிய தலைவர் சாய்குமார், நிதி பிரிவு
அதிகாரிகளை அழைத்து விசாரித்தார். அவர்கள், 'நாங்கள்
தாமதம் செய்யவில்லை; திருத்தி அமைக்கப்பட்ட,
விரைவுபடுத்தப்பட்ட மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு
திட்டத்தை கண்காணிக்கும், ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி., பிரிவு
அதிகாரிகளால் தாமதம் ஏற்படுகிறது' என, கூறினர்.
ஆனால், அந்த பதிலை அவர் ஏற்காமல், 'இணையதள
திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்' என,
கூறினார்.
இதனால், சட்டசபை தேர்தல் முடிந்ததும் முதல்
பணியாக, இணையதளத்தில் விண்ணப் பிக்கும் திட்டம்
செயல்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.