இந்தியாவில், பிள்ளைகளின் உயர்கல்விக்காக குறைந்த
அளவிலான பெற்றோரே, பொருளாதார நோக்கில் தங்
களை தயார்படுத்தி வருவதாக, ஆய்வில் தெரியவந்துள்
ளது.காப்பீட்டு நிறுவனமான, ‘அவிவா லைப் இன்
சூரன்ஸ்’ மும்பை, சென்னை, பெங்களூரு, கோல்கட்டா
உள்ளிட்ட ஏழு நகரங்களில், பெற்றோர் மத்தியில் பிள்ளை
களின் உயர்கல்வி தயார் நிலை பற்றிய ஆய்வை நடத்தி
யது. இந்த ஆய்வில், 11 ஆயிரத்து, 300 பெற்றோர் பங்
கேற்றனர். இதில், 24 சதவீத பெற்றோர் மட்டுமே, பிள்
ளைகளின் உயர்கல்விக்கான பொருளாதார நோக்கில் தயா
ராக நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
42 சதவீத பெற்றோர் உயர்கல்விக்காக பயிற்சி வகுப்பில்
சேர்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்
றனர். சம்பளம் பெறும் ஊழியர்கள் மத்தியில் இந்த
போக்கு அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஐதரா
பாத்தில், 38 சதவீத பெற்றோர், பிள்ளைகள் உயர்கல்
விக்கு தயாராக உள்ளனர். சென்னை நகரில் இது, 25 சத
வீதமாக இருக்கிறது. கோல்கட்டாவில் இது, 11 சதவீத
மாக இருக்கிறது. உயர்கல்வி ஆர்வத்தை பொறுத்த
வரை, 25 சதவீத பிள்ளைகள் மருத்துவராக விருப்பம்
கொண்டு உள்ளனர். 19 சதவீதம் பேர் விளையாட்டு வீரர்
அல்லது வீராங்கனையாக விருப்பம் கொண்டுள்ளனர்.