தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, இந்த ஆண்டு
பொறியியல் படிப்புக்கான விண் ணப்பங்களை
முன்கூட்டியே அதாவது ஏப்ரல் இறுதி வாரத் திலேயே
வழங்க என்று அண்ணா பல்கலைக்கழகம்
திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 575-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி கள்
உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 2 லட்சம் பிஇ, பி.டெக்.
இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ
சிஸ்டம்) பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
ஒற்றைச்சாளர முறையின்படி, மாணவர்கள் ஒரேயொரு
விண்ணப்பம் அனுப் பினால் போதும். ஒவ்வொரு கல்
லூரிக்கும் தனித்தனியே விண் ணப்பிக்க
வேண்டியதில்லை.
கலந்தாய்வின்போது தங் களுக்குப் பிடித்தமான கல்
லூரியை தேர்வுசெய்துகொள்ள லாம். ஒவ்வொரு
ஆண்டும் பொறியியல் மாணவர் சேர்க் கைக்கான
கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி
வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஏறத்தாழ 2
லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள்
அச்சடிக்கப்படும்.
வழக்கமாக பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப
படிவங்கள் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும்.
அதைத்தொடர்ந்து ஜூன், ஜூலை மாதத்தில் கலந்தாய்வு
நடத்தி முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 1-ம் தேதி, முதலாம்
ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிவிடும்.
இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி
நடைபெறவுள்ளது. வாக்குகள் மே 19-ம் தேதி
எண்ணப்படுகின்றன. தேர்தல் மற்றும் அது தொடர்பான
பணிகள் காரணமாக, இந்த ஆண்டு பொறியியல் படிப்
புக்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே அதாவது
ஏப்ரல் கடைசி வாரத்திலேயே வழங்க அண்ணா
பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
வழக்கமான நாளை விட இரண்டு வாரங்களுக்கு முன் னரே
விண்ணப்பம் வழங்கினால், மாணவர்களிடம் இருந்து
பெற்றுக்கொள்ளப்படும் விண் ணப்பங்களை பரிசீலனை
செய்வது உள்ளிட்ட மாணவர் சேர்க்கை தொடர்பான
நடைமுறைகளை முன்கூட்டியே முடித்துவிடலாம் என்று
ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்
கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.