Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, March 21, 2016

இந்தியா முழுவதும் 908 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய உள்துறை அமைச்சகம்

்இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்குமான
அனுமதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடங்கள்
4 ஆயிரத்து 802. அதில் தற்போது 3 ஆயிரத்து 894 பணி
இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. ஐ.பி.எஸ்.
அதிகாரிகளுக்கான 908 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 114 பணி இடங்கள்
காலியாக உள்ளன. அந்த மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான பணியிடங்கள் 517 ஆகும்.
மேற்கு வங்காளத்தில் அனுமதிக்கப்பட்ட 347
பணியிடங்களில் 88 பணி இடங்கள் காலியாக உள்ளன.
கர்நாடக மாநிலத்தில் 215 பணியிடங்களில் 143 ஐ.பி.எஸ்.
அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒடிசா
மாநிலத்தை பொறுத்தமட்டில் 188 பணியிடங்களில் 109
பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன. இதே போல்
மராட்டியம், மத்திய பிரதேசம், காஷ்மீர், மற்றும் யூனியன்
பிரேதங்களிலும் கணிசமான ஐ.பி.எஸ். அதிகாரிகளின்
பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
இந்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம்
தெரிவித்து உள்ளது.