வி.ஏ.ஓ., தேர்வுக்கு, நவம்பர் 12ம் தேதி முதல், டிசம்பர்
31ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளத்தில்,
தேர்வர்கள் பதிவு செய்தனர். மொத்தமுள்ள 813
பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 28ம் தேதி,
மாநிலம் முழுவதும் 3,566 தேர்வு மையங்களில்
நடைபெற உள்ளது.
இதற்கான ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in மற்றும்
www.tnpscexams.net என்ற இணைய முகவரியில்
பதிவிறக்கம் செய்து செய்து கொள்ளலாம்.
மேலும், நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து
கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002
என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது
contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ
தொடர்பு கொண்டு தெளிவு பெற்று கொள்ளுமாறு தமிழ்
நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
அறிவித்துள்ளது.