Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, January 03, 2016

தென்னிந்தியாவில் இருந்து, சர்வதேச கால்பந்து நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் - திண்டுக்கல் 'ஜி.ரூபாதேவி'


சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக செயல்பட திண்டுக்கல்லை சேர்ந்த ஜி. ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லை சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஜி. ரூபா தேவி. பிஎஸ்சி வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பை முடித்துள்ள இவர், தொடக்கத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக் கழக அணிக்காக விளையாடியவர். பின்னர் மாநில மற்றும் தேசிய அணிகளுக்கு தேர்வாகி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
தேசிய, ஆசிய அளவிலான போட்டிகளில் நடுவராக பங்கேற்றார். கத்தார் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளிலும் நடுவராகப் பங்கேற்றார்.
இந்நிலையில் இவரை, சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக செயல்பட பிபா தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவில் இருந்து சர்வதேச நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் என்று பெருமையை பெற்றுள்ளார்.