Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, January 08, 2016

சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்- நாளைமுதல் ரேஷன் கடைகளில் விநியோகம்

பொங்கலுக்காக அறிவிக்கப்பட்ட பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று 5 குடும்பங்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
பொங்கல் திருநாளை பொது மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றவர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு, ரூ.318 கோடியில், தலா ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, 2 அடி நீளக் கரும்பு துண்டு, ரூ.100 ரொக்கம் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, தலைமைச் செயலகத்தில் நேற்று 5 குடும் பங்களுக்கு அவர் வழங்கினார். நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தலைமைச் செயலர் ஞானதேசிகன், உணவுத்துறை செயலர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாளை முதல்...
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் நாளை முதல் விநியோகிக்கப்படுகிறது. இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாரத்தின் முதல் இரு வெள்ளிக் கிழமைகள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதால், சனிக்கிழமை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கும்.
தற்போது ஒரு கோடியே 90 லட்சத்து 15 ஆயிரத்து 418 அரிசி குடும்ப அட்டைகள், 66 ஆயிரத்து 89 காவலர் குடும்ப அட்டைகள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள 19 ஆயிரத்து 543 இலங்கை தமிழர்கள் என ஒரு கோடியே 91 லட்சத்து ஆயிரத்து 50 குடும்பங்களுக்கு பொங்கல் பெரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதற்காக 19,101 டன் பச்சரிசி மற்றும் அதே அளவு சர்க்கரை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கரும்பு அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர், வேளாண் இணை இயக்குநர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கரும்புக்கான விலையை நிர்ணயித்து, விவசாயிகள் அல் லது வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வழங்குவர். கரும்புகள் அதிகாரிகள் முன் னிலையில் 2 அடி நீள அளவில் வெட்டப்பட்டு, கடைகளுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீளக் கரும்புத் துண்டு மற்றும் ரூ.100 ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதன் அடையாளமாக 5 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கி தொடங்கி வைத்தார்.