ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாநகர காவல் ஆணையாளராக இருந்த எஸ்.என்.சேஷசாய், சென்னை
சட்டம்-ஒழுங்கு(வடக்கு) கூடுதல் ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு மண்டல ஐஜி.யாக இருந்த எம்.என்.மஞ்சுநாதா, திருப்பூர் மாநகர காவல் ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.டேவிட்சன் தேவா சீர்வாதம் காவலர் நலன் ஐஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மேற்கு மண்டல ஐஜி.யாக இருந்த கே.சங்கர், சென்னை சட்டம்-ஒழுங்கு(தெற்கு) கூடுதல் ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சட்டம்-ஒழுங்கு (தெற்கு) கூடுதல் ஆணையாளராக இருந்த சி.தர், கோவை மேற்கு மண்டல ஐஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆபரேஷன்ஸ் பிரிவு ஐஜி.யாக இருந்த செந்தாமரை கண்ணன், திருச்சி மத்திய மண்டல ஐஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவலர் நலன் ஐஜி.யாக இருந்த எச்.எம்.ஜெயராம், சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையாளராக இருந்த தாமரைக்கண்ணன், சென்னை வடக்கு மண்டல ஐஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு பணியில் இருந்த சந்தீப்ராய் ரத்தோர், சென்னை கடலோர காவல் குழும ஐஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மை செய லாளர் அபூர்வ வர்மா நேற்று வெளியிட்டார்.