அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு
பணியில் சேர்ந்த பின் படிக்கக் கூடிய (அதிகபட்சமாக)இரண்டு உயர்கல்வி படிப்புகளுக்கு தலா 3% ஊக்க ஊதியம்
வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு படிக்கக்கூடிய படிப்புகளுக்கு பள்ளிக்கல்வித்துறையில்
முன் அனுமதி பெறவேண்டும். முன் அனுமதி பெறாமல் படிக்கும் உயர்கல்வி படிப்புகளுக்கு
ஊக்க ஊதியம் வழங்கப்படமாட்டாது.பள்ளிக்கல்விதுறை சிறப்பு அனுமதி வழங்கினால் மட்டுமே
ஊக்க ஊதியம் பெற முடியும்.
www.tnpgtakarurdt.blogspot.in
இந்நிலையில் கடந்த வாரத்தில் முன் அனுமதியின்றி படித்த
தொடக்ககல்வித்துறை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் பெற சிறப்பு அனுமதி வழங்க ஏதுவாக தொடக்ககல்வித்துறை மூலமாக கருத்துருக்கள் கோரப்பட்டுள்ளன. இதைப்போலவே
முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்த முதுகலை
ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் பெற சிறப்பு அனுமதி (பின் ஏற்பு ஆணை) வழங்கினால் பல்லாயிரக்கணக்கான
முதுகலை ஆசிரியர்கள் பயனடைவார்கள்.
www.tnpgtakarurdt.blogspot.in
இதுகுறித்து கரூர் மாவட்ட
TNPGTA மூலமாக மாநில அமைப்பின் பொதுச்செயலாளர் திரு.வள்ளிவேலு அவர்களிடம் தொடர்பு கொண்டு
பேசியபோது: ” வரும் 11ம் தேதி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரை சந்திக்கவுள்ளோம். அப்போது
இது குறித்துப் பேசி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தவுள்ளோம்” என்றார்.
பின் ஏற்பு ஆணை வழங்கினால் பல்லாயிரக்கணக்கான
முதுகலை ஆசிரியர்கள் பயனடைவார்கள்.
www.tnpgtakarurdt.blogspot.in