இளைஞர்களே, முப்படைகளில் பணிபுரிய ஆசையா?
இந்திய பாதுகாப்பு படைப்பிரிவில் பல்வேறு பயிற்சி மற்றும் பணியிடங்களுக்கான, ‘கம்பைன்டு டிபன்ஸ் சர்வீசஸ் எக்சாமிநேஷன்’, என்ற தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
பணி மற்றும் பயிற்சி பிரிவுகள்: இந்திய ராணுவ அகாடமி, இந்திய கடற்படை அகாடமி, இந்திய விமானப் படை மற்றும் ஆபிசர் டிரைனிங் அகாடமி(சென்னை). மொத்த இடங்கள் - 457.
தகுதிகள்
ராணுவ அகாடமி: திருமணம் ஆகாத, இந்திய குடியுரிமை பெற்ற ஆண். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி.,யில் ’சி’ சர்டிபைடு பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு.
வயது வரம்பு: 17 முதல் 22 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கடற்படை: திருமணம் ஆகாத, இந்திய குடியுரிமை பெற்ற ஆண், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரியில், ஏதேனும் ஒரு இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி.,யில் ’சி’ சர்டிபைடு பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு.
வயது வரம்பு: 17 முதல் 22 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 முதல் 22 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விமானப் படை: மேல்நிலை வகுப்பில் இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களை முதன்மை பாடமாக படித்து, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஜனவரி 1, 2017 நிலவரப்படி 20 வயது முதல் 24 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு: ஜனவரி 1, 2017 நிலவரப்படி 20 வயது முதல் 24 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
ஆபிசர் டிரைனிங் அகாடமி (ஆண்): 17 முதல் 23 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
ஆபிசர் டிரைனிங் அகாடமி (பெண்): திருமணம் ஆகாத பெண்கள், 17 முதல் 23 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். பொதுவாக, ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணிதத் திறன் பரிசோதிக்கப்படும்.
நேர்முகத் தேர்வு: பிச்சர் பர்சப்ஷன் (நிலை 1) மற்றும் உளவியல் சோதனை, குரூப் டாஸ்க் டெஸ்ட் (நிலை 2) ஆகியவை பரிசோதிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 4, 2015.
மேலும் விவரங்களுக்கு: www.upsc.gov.in