TNPGTA நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.
தற்போது தோராயமாக 20க்கும் மேற்பட்ட Whatsapp குரூப்பில் கரூர் மாவட்ட செய்திகளை பகிர்வு செய்து வருகிறோம்.
கரூர் மாவட்ட கல்வித்துறையில் நடந்த, தற்போது நடந்துவரும் பல்வேறு பிரச்சனைகளை ஆசிரிய நண்பர்களுக்கு தெரியப்படுத்தி பள்ளிக்கூடம் சுமூகமாக செயல்பட செய்துள்ளோம்.
கரூர் மாவட்ட TNPGTA நிர்வாகிகள் தங்களது சுயநலத்திற்காக கல்வித்துறை அதிகாரிகளிடம் எவ்வித கோரிக்கையும் வைப்பதில்லை. மேலும் எங்களின் நேர்மையான செயல்பாட்டின் மூலம் ஏமாற்றுச்சங்கத்தினரை செயலிலக்கச் செய்துள்ளோம்.
கரூர் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் எந்தவித பிரச்சனையும் இல்லாததுபோல நமது நிர்வாகிகள் கல்வித்துறை அதிகாரிகளுடன் தங்களுடை சுயநலத்தேவைகளுக்காக மிக இணக்கமாக செயல்படுகின்றனர்.
அதிகாரிகள் என்றும் அதிகாரிகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் தப்பிக்க ஆசிரியர்களை மிக எளிதில் பலிகடா ஆக்கிவிடுவார்கள்.
நமக்குத்தேவை கல்வித்துறை அதிகாரிகளிடம் சலுகையல்ல. நமக்கான உரிமைகளும், மரியாதையயும்தான்.
நம்முடைய நேர்மையான செயல்பாட்டின்மூலம் நாம் சார்ந்துள்ள மாவட்ட ஆசிரியர்கள் நலன் காக்கும் வகையில் இனிமேலாவது செயல்படுங்கள் நண்பர்களே.
TNPGTA கரூர்.