டிஎன்பிஎஸ்சி நடத்தும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (விஏஓ) பிப்ரவரி 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விஏஓ தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதி டிசம்பர் 31 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. இட்தைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி நடக்க
இருந்த விஏஓ தேர்வு பிப்ரவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்காக இந்த போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது.
விஏஓ பணியில் சேருவோருக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்கு
கிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில்
சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது.
6 ஆண்டு விஏஓ பணியை முடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால்
வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய்
ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு
பெறலாம்.