அபராதம் இன்றி, டிச., 15 வரை, மின் கட்டணம் செலுத்தலாம்' என, தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரியம் தெரிவித்துள்ளதாவது:சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், நவ., 30 முதல், கன மழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாவட்டங்களில், மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், டிச., 15 வரை, அபராதம் இன்றி கட்டணம் செலுத்தலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.