Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, January 07, 2016

கருத்துப்படையல் : புத்தாண்டுக் கொண்டாட்டம் அரசு அலுவலகங்களில் கொண்டாடுவது வரவேற்க்கதக்கதா.?- whats app கேள்விக்கு நண்பர்களின் பதில்கள்

                                    கருத்துப்படையல்


  புத்தாண்டுக் கொண்டாட்டம் அரசு அலுவலகங்களில் கொண்டாடுவது  வரவேற்க்கதக்கதா.?- whats app கேள்விக்கு நண்பர்களின் பதில்கள்



” புத்தாண்டு உட்பட எந்த கொண்டாட்டமும் அரசு அலுவலகங்களில் நடத்தப்படக்கூடாது.


ஏனெனில் இதற்கான பணம் எங்கிருந்து பெறப்படும்?
யாரெல்லாம் பங்கிட்டுக் கொள்வார்கள் அல்லது ஸ்பான்சர் பெறப்படுமா?
என ஆயிரம் பிரச்சனைகள் தலை தூக்கும்.

பெரும்பாலும் இது நேரத்தை வீணடிப்பதோடு புதுப்புது பிரச்சனைகளை ஏற்படுத்தும்.வாஸ்து பார்ப்பதிலிருந்து கிடாய் விருந்து வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அரசியல்வாதிகள்,தனியார் விளம்பரதாரர் வரை பெருகி
அதற்கேற்றார்போல் தலைவலியும் அதிகரிக்கும்.


அரசு உடனடியாக கவ னம் செலுத்திட வேண்டிய பிரச்சனை இது!”

          
                                                           - இளங்கோ, அமேநிப, உப்பிடமங்கலம்,கரூர்.


”அரசு அலுவலகங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் தேவையற்றது.

அந்தந்த அரசு அலுவலகங்கள் சார்ந்த விழாக்களை மட்டும் கொண்டாடினால் நன்றாக இருக்கும்.

கல்வித்துறையில் இதுபோன்ற கொண்டாட்டம் கண்டனத்திற்குரியது.”


                                                                 - மூ.மகேந்திரன்,அமேநிப, வாங்கல், கரூர்.


"அலுவலகத்தில் கிடப்பில் உள்ள 5 கோப்புகளுக்கு சரியான நியாயமான தீர்வுகளை எழுதி உரிய ஏழைகளுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்வதன் மூலம் புத்தாண்டு அன்று விழா கொண்டாடுவதாக இருந்தால் கொண்டாடலாம்".

                                                   - ’ஆசிரியர்செம்மல்’அந்தோணிசாமிஅமேநிப, குளித்தலை.


" விழாக்கள் நம்மை ஒன்றுபடுத்தவே என்றாலும் அலுவலகத்தில் தேவையில்லை.  அப்படிக் கொண்டாடுவதால் பணமும், நேரமும் வீண். 

பல நேரங்களில் அது தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும்.”

                                                        - கார்த்திகேயன், அமேநிப, ஈசநத்தம்,கரூர்.

”அரசு அலுவலகங்களில் வேளைப் பளு அதிகம் உள்ளது. இருக்கிற வேலையை மிகவும் கவனமாகவும் உரிய நேரத்தில் செய்து கொடுப்பேன் என்று இந்த புத்தாண்டில் உறுதி ஏற்றால் போதும்.

 கொண்டாட்டம் தேவையற்றது.”

                                                     - லோகநாதன், அமேநிப, உடையார்பாளையம், அரியலூர்`

 "புத்தாண்டுக் கொண்ட்டாட்டம் அரசு அலுவலகங்களில் கொண்டாடுவது என்பது வரவேற்க்கத்தக்க  விசயம் அல்ல.             எந்த ஒரு  விசேச நாட்களையும் கொண்டாடுவது என்பது நாம் கொண்டாடும் விதத்தில்தான் உள்ளது.          ஆங்கிலப்புத்தாண்டாக இருக்கட்டும் தமிழ் புத்தாண்டாக இருக்கட்டும்   கொண்டாடுவது என்பது   நாம் கொண்டாடும் விதத்தில்தான் உள்ளது.    புத்தாண்டு அன்று  ஒரு ஏழைக்கு தன்னால் முடிந்த உதவி செய்வதை கூட கொண்டாட்டமாக நினைப்பவா்களும் உண்டு!!!!!

 நமக்கு வயது வளர வளர அறிவிலும் பண்பிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். நம் அறிவையும் செயலையும்செம்மைபடுத்த ஆரம்பிக்கும் நாளாக நினைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் நம்முள் ஏதாவது ஒரு நல்ல மாற்றத்திற்கு வித்திடும் நாளாக நினைத்து கூட வரவேற்கலாமே தவிர கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. "

                                                              - பெயர் குறிப்பிடாத ஆசிரியை, 944## ###25