Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, January 04, 2016

சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு

புதுச்சேரி மையத்தில் நடந்த சைனிக் நுழைவு தேர்வினில் 232 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை வட்டம் அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் 2016-17ம் கல்வி ஆண்டில் 6, 9ம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
நேற்று நுழைவு தேர்வு சென்னை, உடுமலைப்பேட்டை, புதுச்சேரியில் நடந்தது. புதுச்சேரியில் லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் ௬ம் வகுப்பிற்கு 166 பேரும், 9ம் வகுப்புக்கான நுழைவு தேர்வை 66 பேரும் எழுதினர். காலை 9 மணிக்கு துவங்கி மாலை வரை நடந்தது. ஏற்பாடுகளை கடலோர காவல் படை கமாண்டெண்ட் ரமேஷ் தலைமையிலானோர் செய்திருந்தனர்.