Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, January 09, 2016

வாக்காளர் அடையாள அட்டையுடன் செல்பி எடுத்து அனுப்புங்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரி வேண்டுகோள்

உங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் செல்பி எடுத்து அனுப் புங்கள். சிறந்த புகைப் படத்துக்கு விருது உண்டு என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
கண்ணியமான தேர்தல் பிரசார தொடக்க விழா சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி யில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சகாயம் பேசியதாவது:
தங்களுடைய தலைவர் ஊழ லற்றவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று எண்ணு வது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. நம் தேசம், சமூகம் முன்னேற வேண்டும். அதற்கு தொடக்கமாக நாம் பொறுப் பாளராக இருக்க வேண்டும். நேர்மையான, பொறுப்பான சமூகமாக இந்த தமிழ்ச் சமூகம் மாறுவதற்கு கண்ணியமான தேர்தல் நடக்க வேண்டும்.
இந்த தேசத்தை நேசிப்பதன் அடையாளமாக தமிழக மக்கள் இந்த முறை கண்ணியமான தேர்தலை நடத்திக் காட்டுவார்கள். அதற்கு மாணவர்கள், இளைஞர்சக்தி நிச்சய மாக உறுதுணையாக இருக்கும்
இவ்வாறு சகாயம் பேசினார்.
இவ்விழாவில், தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேசும்போது, “உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக் கிறதா என்று 1950 அல்லது 9444123456 ஆகிய எண்களுக்கு உங் கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை எஸ்எம்எஸ் அனுப்பி, உறுதி செய்துகொள்ளுங்கள். நேர்மையான, நியாயமான தேர்தல் நடக்க ஒத்துழையுங்கள். உங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் செல்பி எடுத்து அனுப்புங்கள். சிறந்த புகைப் படத்துக்கு விருது உண்டு” என்றார்.
www.tnpgtakarurdt.blogspot.in