Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, January 05, 2016

முக்கிய கேள்விகள் புத்தகத்தில் ஜெ., படம் பெற்றோர் அதிருப்தி - கல்விமலர்

முக்கிய கேள்விகள் புத்தகத்தில் ஜெ., படம் பெற்றோர் அதிருப்தி


பிளஸ் 2 கற்றல் கையேடு புத்தகத்தில், முதல்வர் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், முக்கிய கேள்விகள் அடங்கிய, குறைந்தபட்ச கற்றல் கையேடு புத்தகத்தை, தமிழக கல்வித்துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் உள்ள கேள்விகளை படித்தால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும் என, தமிழக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பால் பள்ளிகளில் பாடம் நடத்துவது ஒரு மாதம் வரைபாதிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, குறைந்தபட்ச கற்றல் கையேடு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இதில், முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் புத்தகத்தின் முன், பின் அட்டைகளில் இடம் பெற்றுள்ளது.