Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, December 30, 2015

பொதுத்தேர்வு எப்போது என்பதில் குழப்பம்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பை, கல்வித் துறை இழுத்தடிப்பதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னைகாஞ்சிபுரம்திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் ஏற்பட்டமழை வெள்ள பாதிப்பால்பொதுத் தேர்வை தள்ளிப் போடலாமா எனகல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால்,கல்வி ஆண்டின் இறுதியில்சட்டசபை தேர்தல் வர உள்ளதால்,தேர்வுகளை விரைவில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறையும்தேர்வுத்துறையும் இணைந்து,பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணையை தயாரித்தன. ஆனால்அந்த கோப்புஅரசு அனுமதிக்காக பல நாட்களாக கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தேதி அறிவிப்பு தாமதம் ஆகியுள்ளது.
இதனால்அதிருப்தி அடைந்துள்ள ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது: 
நடப்பு கல்வி ஆண்டில்மாணவர்கள் பல விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைசியாகமழை வெள்ளத்தால்ஒரு மாதம் வகுப்பு நடத்தவில்லை.இந்நிலையில்பொதுத் தேர்வை எழுத வேண்டிய மாணவர்களுக்குதேதி தெரிந்தால்அதற்கேற்ப திட்டமிட்டு படிக்கலாம். வழக்கத்துக்கு மாறாகஇந்த ஆண்டு தேர்வு அட்டவணையைஇன்னும் வெளியிடாமல் இழுத்தடிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.