Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, December 27, 2015

ஐ.நா. சபையின் பசி இல்லா சமுதாய திட்டம் உயர்மட்ட ஆலோசகராக தமிழக விஞ்ஞானி நியமனம்

ஐ.நா. சபையில் கடந்த 2012–ம் ஆண்டு ரியோடி
ஜெனிராவில் நடந்த கூட்டத்தில் பொது செயலாளர் பான்
கீ–மூன் பசி இல்லா சமுதாயத்தை உருவாக்க என்னென்ன
உணவு பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்ளலாம்
என்பது குறித்து ஆராய பசி இல்லா சமுதாய திட்டம்
ஒன்றை உருவாக்கினார்.இந்த திட்டத்தில் உலகம்
முழுவதும் இருந்து பல்வேறு விஞ்ஞானிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் உயர்மட்ட ஆலோசகராக
சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன
முதன்மை விஞ்ஞானி பரசுராமன்
நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அதிகாரப்பூர்வ
அறிவிப்பை இந்த திட்ட தலைவர் நபீகா எம்.காஜி சார்பில் வெளியிட்டார்.