Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, December 27, 2015

ஜன., 18 முதல் 2ம் பருவ தேர்வ

தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை,
ஜன., 18 முதல், இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் கீழ் படிக்கும்
மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு மற்றும்
இரண்டாம் பருவ தேர்வுகள், ஜனவரிக்கு தள்ளி
வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தொடர்
விடுமுறைக்கு பின், ஜன., 2ல் பள்ளிகள் திறந்ததும்,
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, ஜன., 11 முதல், 27
வரை, தேர்வுகள் நடக்க உள்ளன.
இத்துடன், 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு,
ஜன., 11 முதல், 27ம் தேதிக்குள் தேர்வை நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு,
இரண்டாம் பருவ தேர்வை, ஜன., 18 முதல், 27 வரை
நடத்தலாம் என, பள்ளிக்கல்வி துறை அதிகாரி கள்
அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது,
அனைத்து மாணவர்களுக்கும், மூன்றாம் பருவ
புத்தகங்களை வழங்க வேண்டும் எனவும், அதிகாரிகள்
உத்தரவிட்டுள்ளனர்.