நடை பயிற்சியில் ஈடுபடும்
முதியவர்களுக்கு நினைவாற்றலும்,
அறிவாற்றலும் அதிகரிக்கும் என அமெரிக்காவின்
பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள், நடை பயிற்சிக்கும், நினைவு
மற்றும் அறிவாற்றலுக்கும் உள்ள தொடர்பு
குறித்து ஆய்வு ஒன்று மேற்கொண்டனர்.
இளைஞர்கள் 29 பேரும்(18 - 31 வயது),
முதியவர்கள் 31 பேரும்( 55 - 82 வயது) இந்த
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஒவ்வொருவரும் தினமும் நடக்கும் தொலைவு
மற்றும் அவர்கள் நடக்கும் நேரம் பதிவு
செய்யப்பட்டு, அவர்களின் நினைவுத் திறன்,
அறிவுத் திறன் ஆகியவையும்
பரிசோதிக்கப்பட்டன.ஆய்வின் முடிவில் தினமும்
அதிக நேரம் நடை பயிற்சி மேற்கொண்ட
முதியவர்களுக்கு நினைவாற்றலும்,
அறிவாற்றலும் அதிகரிப்பது கண்டறியப்பட்டது.
அதே சமயம் இளையவர்கள் அதிக தொலைவு
நடை பயிற்சி மேற்கொண்டாலும் அவர்களது
நினைவுத் திறன் மற்றும் அறிவாற்றலில் மாற்றம்
இல்லை என்பதும் தெரியவந்தது. இந்த
ஆராய்ச்சியின் முடிவில், முதுமையால் ஏற்படும்
மறதி மற்றும் அதனோடு தொடர்புடைய
பல்வேறு நோய்களை, நடை பயிற்சி மூலம்
தவிர்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்தனர்.