சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை உச்சநீதிமன்றம் புகுத்த முயல்வதை தடுக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்தான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு (சூப்பர் ஸ்பாஷலிட்டி) 189 இடங்கள் உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு மருத்துவ இடங்கள் இல்லை.
1985-இல் உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட இந்திய தொகுப்பின்படி, இளநிலை மருத்துவ இடங்களில் 15 சதவீதமும், முதுநிலை மருத்துவ இடங்களில் 50 சதவீதமும் அகில இந்திய இடங்களுக்கு அளித்து வருகிறோம். ஆனால் நாம் வழங்கும் அளவுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் இடங்களைப் பெறுவதில்லை.
சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதால், அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் கிடைக்கிறது.
இந்த நிலையில், இட ஒதுக்கீட்டு முறையை உருவாக்க உச்சநீதிமன்றம் முயல்வது தமிழக நலனுக்கு மிகவும் எதிரானதாகும். எனவே இந்த முறையை பின்பற்றக் கூடாது என்றார்.