Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, May 15, 2015

இன்று அம்மா திட்ட முகாம்


கரூர் மாவட்டத்தில், தமிழக முதல் ஆணைப்படி இன்று 15ம் தேதி வருவாய்த்துறை சார்பில், "மக்களைத் தேடி' என்ற அம்மா திட்ட முகாம் மூன்றாம் சுற்று நடக்கிறது.
இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் அனைத்து தாலுக்காக்களிலும் சம்மந்தப்பட்ட தாசில்தார் தலைமையில் மக்கள் பிதிநிதிகள் முன்னிலையில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது. இம்முகாமில் தாசில்தார், தனிதாசில்தார்( சமூகபாதுகாப்புத்திட்டம்), துணை தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமில் மக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தகுதியான நபர்களுக்கு அன்றைக்கே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. உடனடி தீர்வு காண முடியாத மனுக்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் உரிய தீர்வு காணப்படும்.
அம்மா திட்டம் இன்று, 15ம் தேதி நடைபெறும் இடங்கள் வருமாறு: கரூர் தாலுகா காக்காவாடி பஞ்சாயத்து அலுவலகம், மண்மங்கலம் புஞ்சை கடம்பங்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகம், அரவக்குறிச்சி தென்னிலை கஸ்பா நூலகக் கட்டிடம், குளித்தலை தாலுகா தோகமலை ஆர்.ஐ., அலுவலகம், கிருஷ்ணராயபுரம் தாலுகா வேங்காம்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம், கடவூர் தாலுகா பாலவிடுதி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடக்கிறது. இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.